படிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமிக்கு தாய் கொடுத்த தண்டனை.. பின் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்..!

Report
530Shares

சரியாக படிக்கவில்லை என்றுகூறி தாய் தாக்கியதில் 5 வயது சிறுமி உயிரிழந்த கொடூரம் நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

தேனியை சேர்ந்த பேராசிரியர் பாண்டியன் தனது மனைவி நித்ய கமலா மற்றும் 5 வயது மகள் லத்திகா ஸ்ரீ ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை லத்திகா ஸ்ரீ டிவி பார்த்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரது தாய் நித்ய கமலா கண்டித்துள்ளார்.

தாயின் தண்டனையால் சிறுமி பலி

ஆனால், சிறுமி அலட்சியத்துடன் இருந்ததால் ஆத்திரமடைந்த நித்ய கமலா குக்கர் மூடியால் லத்திகா ஸ்ரீயை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரை வீட்டிற்கு வெளியே வெயிலில் நிற்க வைத்து ஆசிரியர்களைப் போன்று தண்டித்துள்ளார்.

ஒருகட்டத்தில் ரத்தக் காயங்களுடன் சிறுமி மயங்கி கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் தாய் நித்ய கமலா மீது கொலை வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், படிக்கக் கூறி துன்புறுத்தியதில் தனது மகளை பறிகொடுத்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்...

17957 total views