பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

Report
156Shares

தஞ்சாவூரில் உள்ள சாலியமங்கலத்தில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கடந்த ஓராண்டாக தனது தந்தை தனக்கு பாலியல் வன்கொடுமை தருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், தனது தந்தை கடந்த ஓராண்டாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், தந்தையின் சந்தேகப் புத்தியால் தாய் தற்கொலை செய்து கொண்டதாகவும், தாயின் மறைவிற்குப் பின் அவர் தன்னை அதிகம் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரையடுத்து, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை குழந்தைகள் வன்கொடுமை பாதுகாப்பு சட்டமான போஸ்கோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஆனால், இந்தப் புகாரை அந்தச் சிறுமியின் தந்தை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

4670 total views