கேன்சர் நோயில் இருந்து மீண்டும் வந்த பிரபல வீரர் யுவராஜ்சிங்கின் உருக்கமான வேண்டுகோள்..! நெகிழவைத்த காட்சி!

Report
552Shares

இன்று 37-வது பிறந்தநாளைக் கொண்டாடும் யுவராஜ் சிங், வீடியோ மூலம் அனைவருக்கும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் யுவராஜ் சிங். சில ஆண்டுகளுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இவர், நோயில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம் பிடித்து சாதித்தார். இதனைத்தொடர்ந்து, கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றையும் யுவராஜ் தொடங்கினார்.

#YouWeCan என்ற தொண்டு நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் கேன்சரால் பாதிக்கப்பட்ட பல ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல், கேன்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இன்று தன்னுடையை பிறந்தநாளின் போதும், வீடியோ மூலம் அனைவருக்கும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

உதவிகரம்

“இன்று என்னுடைய பிறந்தநாள் கேன்சர் நோயில் இருந்து மீண்டு புதிய பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன். எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி. நமது நாட்டில் லட்சக்கணக்கானோர் இந்த கேன்சர் நோய்க்கான சிகிச்சை பெற பணமில்லாமல் இருக்கின்றனர். என்னுடைய தொண்டு நிறுவனத்தின்மூலம் கேன்சரால் பாதிக்கப்பட்ட 25 ஏழைக் குழந்தைகளுக்கு உதவிசெய்ய உறுதியேற்கிறேன். நீங்கள் உதவி செய்ய விரும்பினால் மேலே உள்ள ‘லிங்’கை கிளிங் செய்யும். இந்த வீடியோவை பகிர்வதன் மூலமும் உதவிசெய்யலாம். நீங்கள் அளிக்கும் மிகச்சிறு தொகையும் பெரிய உதவியாக இருக்கும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.” என்று கூறியுள்ளார்.

இன்று 37-வது பிறந்தநாளைக் கொண்டாடும் யுவராஜ் சிங்-க்கு, முன்னாள் இன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

19359 total views