ரசிகர்களின் முன் ஆடையை மாற்றிய IPL வீரர்கள்! வைரலாகும் வீடியோ

Report
121Shares

மும்பை அணி வீரர் ஹர்த்திக் பாண்டியாவும், பஞ்சாப் வீரர் கே.எல். ராகுலும் தங்கள் அணி ஆடையை மாற்றிக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

IPL தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை-பஞ்சாப் அணிகள் மேதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியல் பஞ்சாப் அணி தரப்பில் கே.எல்.ராகுல் 60 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். எனினும் அவரது அணி தோல்வி அடைந்தது, இதனால் சற்று வருத்தமாகவே காணப்பட்டார் ராகுல்.

இதனால் அவரை ஆருதலடைய செய்யும் விதமாக ஹர்த்திக் பாண்டியா, கால்பந்து ஆட்டங்களின் முடிவில் வெற்றி பெற்ற அணி வீரரும் தோல்வி அடைந்த அணி வீரரும் தங்களது அணியின் உடைகளை மாற்றி அணிந்து கொள்வது போல் தனது ஆடையினை கே.எல்.ராகுலுடன் மாற்றிக்கொண்டார்.

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!

5308 total views