இந்திய கேப்டன் கோலிக்கு அடுத்த வாரம் டும் டும் டும்?

Report
235Shares

மிகவும் எதற்பார்க்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு அடுத்த வாரம் திருமணம் என்று தகவல் வெளியாகிவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை கம்பீரமாக வழிநடத்தி வரும் கேப்டன் கோலியும், பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

கோலி, அடுத்த வாரம் இத்தாலியில் வைத்து தனது காதலி அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு கோலியின் முக்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 21ம் தேதி மும்பையில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக கோலி நாளை இத்தாலி கிளம்ப உள்ளதாகவும், அனுஷ்கா சர்மாவிற்கான திருமண ஆடை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவரால் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே போல் கடந்த வருட டிசம்பர் மாதமும் கூறப்பட்டு அதனை கோலியும் அனுஷ்காவும் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்னிலையில் இந்த தகவல் உண்மையா என்று இன்னும் சரிவர தெரியவில்லை.

7858 total views