கோர விபத்தில் இரு நடிகைகள் பரிதாபமாக பலி

Report
498Shares

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த வீதி விபத்தில் ஒரே சிற்றூந்தில் பயணம் செய்த இரண்டு தெலுங்கு நடிகைகள் பலியானது டோலிவுட் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பு முடிந்ததும் சிற்றூந்து ஒன்றில் ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சிற்றூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதிய விபத்தில் நடிகை பார்கவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை அனுஷா ரெட்டி சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த விபத்தில் சாரதி, நடிகைகளுடன் பயணம் செய்த இன்னொருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

15917 total views