அபிராமி தொடர்பில் வீட்டின் எதிரே இருக்கும் கடைக்காரர் கண்ணீருடன் வெளியிட்ட பகீர் தகவல்!

Report
3765Shares

அபிராமி என்ற பெண் பிஞ்சுக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கொடூர சம்பவம் இன்று பல குடும்பங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாளுக்கு நாள் அபிராமி குறித்து புது புது தகவல்கள் வெளிந்து கொண்டிருக்கிறது.

அப்பகுதியை சேந்த பெண் ஒருவர் அபிராமி பற்றி கூறுகையில் ,

அந்த பொண்ணு எப்போதுமே இப்படி தான் . அதோட நடை உடை பாவனை எதுவுமே சரி கிடையாது. இதனாலேயே யாரும் அது கூட நெருங்கி பழகமாட்டாங்க. எப்போ பார்த்தாலும் மேக்கப் கலையாம இருக்கும். எப்போ பாரு ஸ்கூட்டில ஊர் சுத்திகிட்டே இருக்கும்.

குழந்தைங்கள கூட அந்த வீட்டு ஓனர் தான் பாத்துக்குவாங்க. ஆனா அந்த குழந்தைங்க ரொம்ப அழகா இருக்கும் அழகா பேசும். பார்க்குற யாருக்குமே அந்த குழந்தைங்கள் உடனே பிடிச்சு போயிடும். அவ்வளவு சமத்து என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அபிராமியின் வீட்டின் எதிர்புறம் இருக்கும் கடைக்காரரும் குறித்த பெண் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளை நினைத்தால் கண்ணீர் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ரொம்ப புத்திசாலி பையன். என் கடைக்கு தான் அடிக்கடி ஸ்னாக்ஸ் வாங்க வருவான். அந்த பொம்பளைய பத்தி நினைச்சாலே எரிச்சலா வருது. முதல் நாள் விஷம் கொடுத்தப்பவே இந்த பையன் பிழைச்சுக்கிட்டான்.

அப்போவாவது அவன விட்டிருக்கலாம். மறுபடியும் அவன அனுப்பியே பால் வாங்கிட்டு வர சொல்லி அதுல விஷத்த கலந்து கொடுத்துருக்கா. அத குடிச்சிட்டு அவளுக்கு பாசமா முத்தம் கொடுத்திருக்கான் அந்த பையன்.

இவ்வளவு பாசமான பையன பொய் கொன்னுட்டாளே , ஒரு தாய்க்கு இப்படி மனசு வருமா என்று கடைக்காரர் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

128550 total views