சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்! இந்த வாரம் நாமினேஷன் ஆனவங்க இவங்கதான்! அடுத்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா?

Report
1114Shares

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் 5 பேர் நாமினேஷன்ன லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது கடந்த மூன்று சீசன்கள் முதலே வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெற்றது.

அதன்படி சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஆஜித் ஆகிய 5 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

அவர்களில் ஆரியும் சுரேஷ் சக்கரவர்த்தியும் அதிக அளவாக தலா 9 ஓட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

இந்த வார நாமினேஷன் புராசஸில் இருந்து 4 பேர் தப்பித்தனர். ரியோ கேப்டன் என்பதாலும் அர்ச்சனா வந்து முதல் வாரம் என்பதாலும் அவர்கள் இருவரும் தப்பித்தனர்.

அவர்களை தொடர்ந்து வேல்முருகனும் சனம் ஷெட்டியும் கடந்த வாரம் நடைபெற்ற பால் டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் அவர்கள் இருவரும் நாமினேஷனில் இருந்து தப்பித்தனர்.

இதனிடையே முதல் முறையாக என்னென்ன காரணத்தை சொல்லி ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்தார்கள் என்பதையும் நச்சென போட்டுவிட்டார் பிக்பாஸ்.

loading...