லொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு! கடும் எரிச்சலாகும் பார்வையாளர்கள்

Report
821Shares

பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் கடுமையான டாஸ்க்குகள் என்று பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவீனை மீண்டும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கவின், சக போட்டியாளரான ஷெரின் பின்னால் சுற்றி கடலை போடுவதை பார்த்த பார்வையாளர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதலே அங்கிருந்த பெண் போட்டியாளர்களிடம் கடலை போட்டும் காதலித்தும் கன்டென்ட் கொடுக்க தொடங்கியவர் கவின்.

சாக்ஷியை காதலித்த போதே லொஸ்லியாவையும் காதலிக்க தொடங்கினார்.

இதனால் சாக்ஷியுடனான காதல் முறிந்தது. அதே நேரத்தில் லொஸ்லியாவுடனான காதல் தீவிரமடைந்தது. ஆனால் இந்த காதலை பார்வையாளர்களும் ரசிக்கவில்லை, லொஸ்லியாவின் பெற்றோரும் ரசிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஷெரின் பின்னால் சுற்ற தொடங்கியுள்ளார். இதேவேளை, பல முறை ஷெரின் எலிட்டேட்டிங்கா இருக்கு என்று கூறியும் அவரை தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார்.

அதனை பார்த்த பார்வையாளர்கள் லொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் இப்படி ஒரு முடிவை கவின் எடுத்துள்ளாரா? அல்லது ஷெரினை காலிப்பண்ண இந்த யுத்தியா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

ஒரு சிலர் லொஸ்லியாவை வெறுப்பேற்ற கூட கவின் இவ்வாறு நடந்து கொள்கின்றார் என்று நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.