திமிராக பேசிய லொஸ்லியா... அதிரடியாக நோஸ்கட் செய்த கமல்! வாழ்த்து கூறிய ஈழத் தமிழர்

Report
562Shares

பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த புதிதில் அமைதியாக இருந்த லொஸ்லியாவுக்கு கவின் மீது காதல் வந்தது.

அதன் பிறகு அவரை பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் கமல் ஹாஸன் முன்பு கால் மீது கால் போட்டு அதை ஆட்டிக் கொண்டே பேசுவதும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

நேற்று கமலிடமே திமிராக பேசியிருப்பார். இதன் போது பிக் பாஸ் என்பது போட்டிதளம் இதை ஒரு சுற்றுலாத்தலமாக மாத்திடாதிங்க என்று கமல் கூறியதும் லொஸ்லியாவுக்கு முகமே விளங்கவில்லை.

உள்ளே போகும் போது யாரையுமே தெரியாது அல்லவா, அப்படியே நினைத்துக் கொண்டு செயல்படுங்க, பொதுவாக சொல்கிறேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரம் இன்றி கமல் லொஸ்லியாவுக்கு நோஸ்கட் கொடுத்துள்ளது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு பிடித்துள்ளது. லொஸ்லியா கமலிடமே பொய் சொல்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் கேமரா இருப்பதை மறந்துவிட்டு பேசுகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

இதேவேளை, பிக் பாஸ் பார்வையாளர்கள் பலருக்கும் பிடிக்காத ஒரு போட்டியாளராகிவிட்டார் லொஸ்லியா. மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களின் ஆசிரியர்கள் சிலர் பேசினார்கள்.

ஈழத்தில் இருந்து லொஸ்லியாவின் ஆசிரியரும் பேசியிருந்தார். நாட்டுக்கு வெற்றியுடன் திரும்புங்கள் என்று வாழ்த்து கூறினார்.

மேலும், நேற்றைய நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பார்வையாளர்களின் ரியக்சனை நீங்களே பாருங்கள்.