மாடியிலிருந்து கால் தவறி விழுந்த நடிகர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகினர்

Report
337Shares

பிரபல தமிழ் பட நடிகர் ஸ்ரீராம் மாடியிலிருந்து கால் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

2019ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சில்லுக்கருப்பட்டி, இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பவர் ஸ்ரீராம்(வயது 60).

தொடர்ந்து இமைக்கா நொடிகள், அதோ அந்த பறவை போல, கூட்டத்தில் ஒருவர் என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தன்னுடைய வீட்டின் மாடியில் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த தண்ணீர் டேங்கை சுற்றிப் பார்த்துள்ளார்.

அப்போது கால் தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஸ்ரீராமின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினருக்கும் பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழக காவல்துறையில் கிராவ்மகா என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.