பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி? கிடைத்த வாக்குகள் மட்டும் எவ்வளவு தெரியுமா?

Report
503Shares

பிக்பாஸ் சீசன் 4ன் அதிக பட்ச வாக்குகளை பெற்று ஆரி வின்னர் ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜீத், அர்ச்சனா, சுசித்ரா என மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொண்டனர்.

தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸில், ரியோ, சோம், ஆரி, பாலா மற்றும் ரம்யா பாண்டியன் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

நாளை இறுதி நாள் என்பதால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பிடித்த போட்டியாளர்களுக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 16 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆரி முதலிடத்தில் இருப்பதால் அவரே வெற்றி பெறுவார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை யார் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.