கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது பிரபல நடிகர் செய்த செயல்!

Report
671Shares

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தூங்கிக் கொண்டிருக்கும் போது நடிகர் மற்றும் இயக்குனர் எடுத்த செல்பி வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ரஜினிகாந்துடன் அண்ணாத்த, செல்வ ராகவனுடன் சாணிக் காயிதம் படத்திலும், தெலுங்கில் ரங் தே படத்திலும் கீர்த்தி நடித்து வருகிறார்.

ரொமாண்டிக் படமாக உருவாகி வரும் ரங் தேவிலும், நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

வெங்கி அட்லுரி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடந்து வருவதாக தெரிகிறது.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனியாக அமர்ந்து ஓய்வெடுத்த கீர்த்தி சுரேஷ் அப்படியே குட்டி தூக்கம் போட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கண்ணில் துணியைப் போட்டபடி நடிகர் நிதின் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லுரி இருவரும் அவர் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.