பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கவலைக்கிடம்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
1440Shares

பிரபல நடிகையான கவுசல்யா செந்தாமரையின்(வயது 74) உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி கவுசல்யா, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உடன் ‘திருடாதே’ படத்தில் நடித்திருக்கும் இவர் ‘வயசு பசங்க’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார், கூட்டுக்குடும்ப கதையை மையப்படுத்தி உருவாகும் இத்தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இத்தொடரில் நடித்து வரும் கவுசல்யா செந்தமாரை திடீரென மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்.

உடனடியாக மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர், அங்கு சிகிச்சை நடைபெற்றுவரும் நிலையில், உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

loading...