பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த தர்ஷன் மீது நடிகையான சனம் ஷெட்டி பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.
அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரில், தன்னை காதலித்து தர்ஷன் ஏமாற்றி விட்டதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கின் விவகாரம் சூடுபிடித்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு தர்ஷன் மனுத்தாக்கல் தொடுத்தார்.
அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் அளித்துள்ளதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
அதன்பின்னர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
You May Like This Video