விளையாடிக் கொண்டிருந்த பிரபல நடிகர் திடீர் மரணம்

Report
471Shares

மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகர் சபரிநாத் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் சபரிநாத். இவர் மின்னுக்கேட்டு, அமலா மற்றும் சுவாமி அய்யப்பன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது பாடாத பைங்கிளி என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சபரிநாத் நேற்று மாலை தனது வீட்டில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சபரிநாத் நேற்று உயிரிழந்தார்.

அவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.