கொரோனா நிவாரண நிதி.. அள்ளிக்கொடுத்த பிரபலங்கள்! நடிகர் பிரபாஸ் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

Report
427Shares

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் ஆட்டிப் படைத்து வருகின்றது.

நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நிவாரண நிதி அளிப்பதில், மற்ற மொழி நடிகர்களை விட, டோலிவுட் நடிகர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் பிரதமர் நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர் நிதிக்காக தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் கொரோனா நிவாரண நிதியாக 2 கோடி ரூபாய் கொடுத்து, பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்.

பவன் கல்யாணை தொடர்ந்து டோலிவுட்டின் இளம் நடிகர்களான ராம் சரண் 70 லட்சம் ரூபாயும், மகேஷ் பாபு ஒரு கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன், 1.25 கோடி ரூபாயும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசின் நிவாரண நிதிக்காக வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், மற்ற டோலிவுட் நடிகர்களை பின்னுக்குத் தள்ளும் வகையில், கொரோனாவின் கோரம் அறிந்த பிரபாஸ், பிரதமர் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசின் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சமும் கொடுத்துள்ளார். பாகுபலி நடிகரின் இந்த பரந்த மனசை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால், அம்மாநில சூப்பர்ஸ்டார் நடிகர்களான மோகன் லால், மம்முட்டி, பிருத்விராஜ், துல்கர் சல்மான், நிவின் பாலி உள்ளிட்டோர் எந்த ஒரு நிதியுதவியும் அளித்தது போன்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் FEFSI தொழிலாளர்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் தனுஷ் 15 லட்சம் ரூபாய் சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளார். சூர்யா, சிவகுமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியாக அளித்துள்ளனர். நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதி கொடுத்துள்ளார். மற்ற முன்னணி நடிகர்கள் இதுவரை எந்த உதவியும் செய்ததாக தெரியவில்லை.

loading...