உடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை.... இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா?

Report
568Shares

கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் தான் இரட்டை கொமடியர்கள் சகாதேவன் மகாதேவன்.

மிகவும் குறுகிய காலத்தில் புகழ் அடைந்தது போலவே, இவர்களது உடல் எடையும் குறுகிய காலத்தில் கூடிக்கொண்டே சென்றதால் கடும் அவதியை மேற்கொண்டனர்.

ஆம் இவர்கள் இருவரது உடல் எடை மரபு ரீதியானது என்று மருத்துரவ்கள் கூறியதால் பின்னர் உடல் எடையைக் குறைக்கமுடியவில்லை. பின்பு உறவுக்கார பெண்களைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

ஆனால் மூத்தவர் சகாதேவனின் உடல் எடை மிகவும் அதிகமானதால் நடக்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கியதோடு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு உடல் பயங்கரமாக வீங்கி மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரது மற்றொரு சகோதரரான மகாதேவனுக்கும் உடல் எடை கூடியதோடு, சர்க்கரை நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.

ஆனால் நாளடைவில் காலில் புண் வர ஆரம்பித்தது மட்டுமின்றி சீல் வைத்து மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு கதறித் துடித்தார். பின்பு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவரது வலது காலை அகற்றினர். அவ்வாறு அகற்றிய போது மருத்துவமனை செவிலியர் கூட அவரது பக்கத்தில் வரவில்லையாம். அதன் பின்பு இரண்டே நாட்களில் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார் மகாதேவன்.

பல படங்கள் நடித்த மகாதேவன் இறந்த போது திரையுலகினர் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஓரிரு நடிகர்களே வந்ததாக கூறப்படுகின்றது.

மறைந்த மகாதேவனுக்கு சாந்தி என்ற மனைவியும், அன்பரசி (16) என்ற மகளும் உள்ளனர். அப்பா போலவே உருவமும் முகமும் இருப்பதால் அன்பரசியும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

loading...