17 வயதில் திருமணம்!.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின் சோகமான வாழ்க்கை

Report
402Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரில் அறிமுகமாகி தொடர்ந்து பல ஹிட் தொடர்களில் நடித்து வருகிறார் கிருபா.

சின்னத்திரைக்கு முன் தன்னுடைய வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியொன்றில், எனக்கு அப்பா இல்லை, இதனால் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே எனது அம்மா திருமணம் செய்து வைத்து விட்டார்.

மூன்று பிள்ளைகளும் பிறந்தது, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

தாய் வீட்டிலும் யாரும் எங்களை பார்த்துக் கொள்ள முடியாத சூழல், கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன்.

நானும் படித்து பட்டம்பெற்றேன், மேலாண்மை படித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எனது நண்பர்கள் நடிக்கலாம் என ஐடியா கொடுத்தனர்.

தொடர்ந்து சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, சொந்தபந்தங்கள் பலரும் ஏளனமாய் பார்த்தனர்.

எனது கணவர் கூட எனக்கு மிரட்டல்கள் விடுத்தார், எதையும் துணிச்சலாக சமாளிக்கக்கூடிய பெண் நான், எனது பிள்ளைகளும் அப்படி இருக்கவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மீது அதிக பற்றுக்கொண்ட கிருபா, கவிஞராகவும் சில விருதுகளை வாங்கி அசத்தியிருக்கிறாராம்.

loading...