இலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழகம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்.. தீயாய் பரவும் காட்சி

Report
2812Shares

தமிழகத்தில் இருந்து வெளிவரவிருக்கும் LKG திரைப்படப் பாடல் ஒன்றில் “ஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இது உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்” என்று ஈழத்தில் புகழினை கூறியுள்ளது.

இந்த எல்கேஜி திரைப்படம் ஆர்.ஜே.பாலாஜியின் கதை திரைக்கதை எழுத்தில் உருவாகியிருக்கிறது .

இப்படம் இன்னமும் வெளியாகாத நிலையில் தமிழக அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான பாடல்கள் சில வெளியாகியுள்ளன. தமிழைப் போற்றிப்பாடும் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அப்பாடலில் தமிழின் பெருமையும், ஈழத்தின் தமிழ் காப்பும் மிகத் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், “ஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இது உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்” என்னும் வரி வரும் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளது.

இப்படப்பாடலை தமிழகத்தின் முன்னனி பாடலாசிரியர்களில் ஒருவரான பா.விஜய் எழுதியிருக்கிறார். இதனால் இப்பாடலுக்கு கூடுதல் சிறப்போடு உலகத் தமிழர்கள் அதனைப் பகிர்ந்து வருவதுடன், படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகிறார்கள்.

87540 total views