வெளிநாட்டில் சின்மயி யாருடன் தங்கினார்.. வெளியான வீடியோ ஆதாரம் ?

Report
2026Shares

சின்மயி தவிர, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்துவைக் குற்றம்சாட்டி தனக்கு சிலர் அனுப்பிய வாட்ஸப் செய்தியைப் பதிவுசெய்திருந்தார்.

பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார்.

அக்டோபர் 9ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழமாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார்.

விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் எனக் கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருக்கிறார். ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுரேஷ் என்பவர் வைரமுத்து மீது சின்மயி அபாண்டமாக பழி சுமத்துகிறார். அவர் அப்படி பட்டவர் இல்லை என்பது போல ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். மேலும் சின்மயிம் அவரது தாயாரும் என் வீட்டில் தான் தங்கினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

85670 total views