நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி யார் தெரியுமா? விவாகரத்துக்கு பிறகு பெண் குழந்தைகளுடன் கடந்து சென்ற சோகமான வாழ்க்கை!

Report
2178Shares

கே.பாலசந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமானவர் லலிதா குமாரி. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர்.

நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்துகொண்டு, சினிமாவிலிருந்து விலகினார். தற்போதைய நடிகர் சங்க நிர்வாகத்தில் ஆர்வமாகப் பணியாற்றிவருகிறார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு பிரபல ஊடகம் ஒன்றிடம் இவரின் காதல் குறித்தும் தற்போதைய வாழ்க்கை தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜூடன் தம்பதியா வாழ்ந்தது அழகான காலகட்டம். ஒருகட்டத்தில் உறவில் விரிசல் வந்து.விவாகரத்துப் பெற்றோம்.

அவர், இன்னொரு திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டார். நான், இரண்டு குழந்தைகளுடன் தனி வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன்.

நாங்க இருவருமே முதிர்ச்சியான சிந்தனையுடன் எடுத்த முடிவு அது. பழைய விஷயங்களை நினைச்சு வருத்தப்பட எதுவுமில்லை. அவர் மீது எனக்கும், என் மீது அவருக்கும் எப்போதும் அன்பு, மரியாதை இருக்கு என்று கூறியுள்ளார்.

இப்போ நாங்க நல்ல நண்பர்கள். மகள்கள் மீது அளவில்லா அன்பு வெச்சிருக்கார். அந்த அன்பு நாளுக்கு நாள் கூடிட்டே போகுது. பொண்ணுங்களின் படிப்பு உட்பட எங்க மூவரின் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்துகொடுக்கிறார்.

விடுமுறை நாள்களில் பொண்ணுங்க அப்பாவின் வீட்டுக்குப் போயிருவாங்க. அவரோடு அவுட்டிங் போவாங்க. அவர் சென்னைக்கு வரும்போதும் மகள்களைச் சந்திப்பார்.

நான் கடைசியா நடிகர் சங்க நிகழ்வில் அவரைச் சந்தித்துப் பேசினேன். அவரை நான் நேரில் சந்திக்கிறது குறைவா இருந்தாலும், பொண்ணுங்க எதிர்காலம் குறித்த ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசிப்போம் என்றும் கூறியுள்ளார்.

74189 total views