தாறுமாறாக குண்டானது இதுக்குதானாம்!.. ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்த நடிகை?

Report
804Shares

பாரதிராஜா இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இயக்குநர் விஜய், பிரியதர்ஷன் மற்றும் பாரதிராஜா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் அல்லது நயன்தாரா நடிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க இருக்கிறாராம். இப்படத்தில் பாரதிராஜாவுக்கு உறுதுணையாக அமீரும், வெற்றிமாறனும் பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சமீபத்தில் உடல் எடை கூடிய நிலையில் அனுஷ்கா தோற்றமளிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

அனுஷ்காவின் அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், தற்போது இந்தக் கதாபாத்திரத்திற்காகத் தான் அவர் உடல் எடையை அதிகப்படுத்தியுள்ளதாக அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

30591 total views