முகத்தில் ஆசிட் அடித்துவிடுவேன்... பிரபல நடிகைக்கு வந்த கொலை மிரட்டல்!

Report
88Shares

சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் `100'. இப்படத்தினை ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வாவும் அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர். இந்நிலையில் அதர்வாவை வைத்து த்ரில்லர் படமொன்றை இயக்கியிருக்கிறார். மகேஷின் தந்தை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரபல காட்சியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் ஹன்சிகாவுக்கு சம்பளமாக 75 லட்சம் பேசப்பட்டு அதில் முன் பணமாக 35 லட்சம் கொடுத்திருக்கிறார். மீதி பணத்தை படம் முடித்த பிறகு கொடுப்பதாக கூறி இருந்த நிலையில், பாதி படத்தை நடித்து முடித்த பிறகு ஹன்சிகா மீதி சம்பளத்தை கேட்டுள்ளார். அப்போது 40 லட்சத்திற்கு 5 செக்குகள் கொடுத்துள்ளார் ரமேஷ்.

மூன்று நாட்கள் ஷூட்டிங் பெண்டிங் இருந்த நிலையில் மகேஷ் கொடுத்த செக் பவுன்சாகி விட்டது. அமவுண்ட் கிளியர் ஆனால் தான் ஷூட்டிங் வருவேன் என கூறியுள்ளார் ஹன்சிகா. மேலும் நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துவிட்டார்.

இதனால் கோபமான மகேஷ், 'நான் நினைத்தால் தமிழ் சினிமாவிலேயே நீ நடிக்க முடியாது, மூஞ்சில ஆச்சி அடித்து விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்றும் ஹன்சிகாவை போனில் மிரட்டியுள்ளாராம். தற்போது இவை கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

3585 total views