நடிகை கோபிகாவின் தற்போதைய நிலை!.. அதிர்ச்சியில் ரசிகர்கள் : புகைப்படம் உள்ளே

Report
1770Shares

ஆட்டோகிராப் திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார் நடிகை கோபிகா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது. இதில், அவரின் குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வளவு பெரிய அழகிய பெண் குழந்தை இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். கோபிகாவுக்கும், அயர்லாந்தில் மருத்துவராக இருக்கும் அஜிலேஜுக்கும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு ஒதுங்கி அயர்லாந்திலேயே கணவருடன் குடியேறினார். இவர்களுக்கு எமி என்ற மகளும், எய்டன் என்ற மகனும் உள்ளனர்.

இப்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்த கோபிகா, தனது கணவர், தான் படங்களில் நடிப்பதை கூறித்து எந்த ஒரு தடையும் செய்தது இல்லை என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார். இதனால், மீண்டும் படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

53651 total views