நடிகர் அஜிதின் முதல் காதல்! ஷாலினி என்ன சொன்னார் தெரியுமா? அம்பலப்படுத்திய இயக்குனர்

Report
395Shares

அஜித்- ஷாலினி காதல் ஜோடியின் காதல் வாழ்க்கை என்றும் ரசிகர்களுக்கு கற்றுக் கொடுக்கும் காவியம்தான்.

இந்த ஜோடி திருமணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக மணவறையில் நின்றபோது வாழ்த்தாத உள்ளங்கள் இல்லை.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்று பெரிய நட்சத்திர பட்டாளங்களே வந்து வாழ்த்தினர். அரசியல் வட்டாரத்தில் பெரும் தலைவர்களாக கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி என பாரபட்சம் காட்டாமல் இவரது கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்கும் காதல் வந்துள்ளது. இதில் அஜித் தான் தன் காதலை முதலில் கூறியுள்ளார்.

இதை அவர் எப்படி கூறினார் என்ற தகவலை அமர்க்களம் இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரு நாள் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்த போது சரணிடம் அஜித் சென்று ‘சார் என் மொத்த கால்ஷிட்டையும் இந்த படத்திற்கே தந்துவிடுகின்றேன்.

சீக்கிரம் படத்தை எடுத்து முடியுங்கள், இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் நான் இந்த பெண்ணை காதலித்து விடுவேன்’ என்று ஷாலினியை வைத்துக்கொண்டே அஜித் சொல்ல, அது தான் முதன் முதலாக அஜித் காதலை ஷாலினியிடம் சொன்ன தருணமாம்.

ஷாலினி எதுவும் கூறாமல் மௌனமாக சென்று விட்டாராம். பொதுவாக பெண்கள் மீது அதிக மரியாதை வைத்தவர் அஜித். பெண்கள் பாதுக்காப்பு பற்றியும் அவர்களின் வேலைகள் மீது நாம் செலுத்த வேண்டிய அன்பு குறித்தும் அவர் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார்.

அந்த அன்புதான் அஜித்தின் காதலுக்கு அச்சாணியானது என்றால் மிகையாகாது. அந்த அன்பு உருவான மொமெண்ட் பற்றி ஷாலினியே ஒரு பேட்டியில் வெளியிட்ட தகவல் இது.

இதேவேளை, காதல் பரிசாக இவர்களுக்கு அனெளஷ்கா 2008இல் பிறந்தார். மகன் ஆத்விக் 2015இல் பிறந்தார். இப்போது அஜித்திற்கு 47 வயதாகிறது. காதல் மட்டும் வழமைக்கு மாறாக அதிகரித்து கொண்டே இருக்கிறது.

ஷாலினி கிறிஸ்தவர், அஜித் பிராமின். இது இவர்களது காதலுக்கு என்றும் தடையாகவே இருந்ததில்லை. இவர்கள் யாரும் மற்றவர்களுக்காக மதம் மாறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

12340 total views