பிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா? கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா

Report
1245Shares

பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அவருடன் வம்சம் தொடரில் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கண்ணீருடன் கூறியுள்ளார்.

எப்பொழுதும் அவருடன் தொடர்பில் இருந்திருக்கும் இவர் கடந்த ஒரு மாதமாக அவரது நடவடிக்கை கொஞ்சம் சரியில்லை என்று கூறியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் பிரியங்கா பதிவிட்டு வந்த தகவல் அதனை உறுதிபடுத்தியதாகவும், அவரது கணவரும் இதேப் போன்ற பதிவுகளையே வெளியிட்டு வந்தார் என்றும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் குடும்பபிரச்சசினையில் இருக்கின்றனர் என்று தெரிந்து கொண்ட பூமிகா பிரியங்காவின் கணவரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அவளிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டாராம்.

பிரியங்கா சமீபத்தில் அவர் வெளியிட்ட ஐ வாண்ட் டூ டை என்ற வார்த்தைகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டதை அவதானித்த வம்சம் பூமிகா உடனே அவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அதற்கு பிரியங்கா சும்மா தான் அக்கா என்று அழுதுள்ளார். நேரில் பார்க்கும் போது கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அளவுக்கதிகமான பரிசுப்பொருட்களை எனக்கு கொடுத்துள்ளார். அதனை அவதானிக்கும் பொழுது அவள் ஏன் இவ்வாறு செய்தார் என்ற கேள்வியுடன் கண்ணீர் வடித்துள்ளார்.

44254 total views