தனிமை படுத்தப்படும் மும்தாஜ்....ஆதரவு தருவாரா டேனி....சேட்டையை ஆரம்பித்த வைஷ்ணவி....

Report
187Shares

நேற்று ஆரம்பித்த பரபரப்பு இன்றும் சற்று நிகழ்ச்சியில் தொடர்வதாகவே இருந்தது. ஆனால் லக்ஸூரி பட்ஜெட் போட்டிகளை தவிர, பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் மத்தியில் அவ்வளவு இணக்கமில்லை என்பது இன்றைய நிகழ்ச்சியில் உணர முடிந்தது.

போட்டி என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றுகூடி விடுகிறார்கள், ஆனால் டாஸ்குகள் முடிந்த பிறகு அவரவர் தனித்தனியாக வேலைகளில் கவனிக்க சென்று விடுகின்றனர்.

அதாவது கேமரா முன்னாடி நடிப்பது, அறிவுரைகளை வழங்குவது போல பேசுவது, மற்ற போட்டியாளர்களை குறித்து குறை சொல்வது என்று இதுதான் அந்த வீட்டில் பலருக்கும் தலையாய பணியாக உள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில், மற்ற பெண் போட்டியாளர்கள் சேர்ந்து தனக்கு எதிராக சூழ்ச்சி வலை பிண்ணுவது மும்தாஜிற்கு தெரியவந்ததுள்ளது. அதன்காரணமாக டேனி, யஷிகா, ஐஸ்வர்யாவின் ஆதரவை அவர் நாடுகிறார்.

போட்டிகளின் படி, எதிரெதிர் அணியாக இருந்தாலும் மும்தாஜ் இன்று நாள் முழுவதும் டேனி, யஷிகா உடனே செலவழித்தார். நேற்று முட்டிக்கொண்ட மகத் மற்றும் பாலாஜி இன்று நிகழ்ச்சியில் சமாதானம் ஆனது போலவே இருந்தது.

இதுவரை டேனியுடன் இணக்கமாக இருந்து வந்த வைஷ்னவி, இன்று அவருக்கு எதிராக களமிறங்கியுள்ளார். மேலும் அந்த எண்ணத்தை மற்ற பெண் போட்டியாளர்கள் மத்தியிலும் அவர் பகிர்ந்துக்கொள்கிறார்.

முந்தைய நிகழ்ச்சிகள் வரை அமைதியாக இருந்து வந்த ரித்திகா, இன்று தான் சிலரை நேரடியாகவும் மறைமுகமாவும் எதிர்க்கும் நிலைபாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரம்யாவும் இன்று முதல் புதிய மனநிலையை அடைந்துள்ளார்.

முன்பு குறிப்பிட்டது போல பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று எழுந்த சலசலப்பால் இப்போதுதான் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மை எழுந்துள்ளது. யாரை எதிர்த்து இடத்தை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்று ஒவ்வொருவரும் செயலாற்ற தொடங்கியுள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்து, மீதமுள்ள நாட்களிலும் பிக்பாஸ் 2 சுவராஸ்யமாக செல்லும் என எதிர்பார்க்கலாம்

6186 total views