கிரிக்கெட் வீரர் ராகுலுடனான உறவு குறித்து மௌனம் கலைத்த நடிகை! வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
187Shares

கிரிக்கெட் வீரர் ராகுல் மற்றும் நடிகை நிதி அகர்வால் ஆகியோருக்கு இடையேயான உறவு குறித்த தகவல்கள் அண்மைக்காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக நடிகை நிதி அகர்வா விளக்கமளித்துள்ளார். ராகுலுடனான உறவு குறித்து பேசிய நிதி அகர்வால், இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.

நீண்டகால நண்பர்கள். நான் நடிகையாவதற்கும் ராகுல் கிரிக்கெட் வீரராவதற்கும் முன்பிலிருந்தே நாங்கள் நண்பர்கள்.

எனவே இந்த வதந்திகள் என்னையோ அல்லது எங்களுக்கு இடையேயான நட்பையோ எந்தவிதத்திலும் பாதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேவைள, இந்தியில் முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகிய நிதி அகர்வால், தெலுங்கில் நடித்துள்ள சவியாசாச்சி திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

6844 total views