உழைத்தால் மட்டும் போதுமா? அது அதுக்குனு நல்ல நேரம் மனசு வேணும்.... முக ராசி வேணும்யா..வாயை கொடுத்து வாங்கிகட்டிகிட்ட ரஜினி!

Report
52Shares

உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேறிட முடியாது என்றும் கடவுளின் அருளும் நல்லமனமும் இருந்தால் தான் முன்னேற முடியுமென ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் பல்கலை கழக வேந்தர் ஏ.சி. சண்முகத்திற்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் பேசிய ரஜினிகாந்த், சண்முகத்தின் உழைப்பு தம்மை மிகவும் கவர்ந்த ஒன்று என்றார். அதைவிட சண்முகத்தின் தலை அலங்காரம் தம்மை, மிகவும் கவர்ந்த ஒன்றும் என்றும் தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம் என்றும் நகைசுவையாக அவர் குறிப்பிட்டார்.

இரும்பு போல் உழைத்து எறும்பு போல் இருக்க வேண்டும் கூறிய ரஜினி, தாம் மாற்றி கூறி விட்டதை உணர்ந்து திருத்தினார். தாம் மாற்றி கூறியதை இணையத்தில் பலர் கேலி பொருளாக்கி விடுவார்கள் என்றும் தம்மை தாமே கேலியும் செய்து கொண்டார்.

2353 total views