எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி! யார் தெரியுமா?

Report
2387Shares

நடிகர் ஆர்யாவின் திருமணத்திற்கு பெண் தேடுவதற்காகவே பிரபல தொலைக்காட்சி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஒரு ரியாலிட்டி ஷோவினை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சி பல விமர்சனங்களை தாண்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பல பெண்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரைசென்று கடைசியில் ஆர்யாவிற்கு மணப்பெண்ணாக யார் வருவார் என்று பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டார்.

இவர் திருமணத்தை தள்ளிப்போட்டு வருவதை தொடர்ந்து இவரது தம்பியும் நடிகருமான சத்யாவிற்கு தற்போது முதலில் திருமணம் செய்து வைக்கலாம் என ஆர்யாவின் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

சத்யா 2008 ஆம் ஆண்டில் காதலால் 2 கல்யாணம் திரைப்படத்தின் மூலம் நடிக்கத்துவங்கிய இவர் அமரா காவியம் படத்தின் மூலம் பிரபலமடைந்தார்

இந்நிலையில், அவர் நீண்ட நாட்களாக காதலித்து வரும் பாவனா என்பவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.

89929 total views