சில வருடம் பிரிந்த கணவரை பிக்பாஸ் வீட்டில் சந்திக்கும் மனைவி..! அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

Report
814Shares

விஜய் டிவியின் ஆஸ்தான ஆர்ட்டிஸ்ட் தாடி பாலாஜியும், அவர் மனைவி நித்யா பாலாஜியும் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுள்ளனர்.

'தாடி' பாலாஜி விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு', பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்' போன்ற ஷோக்களில் பட்டை கிளப்பியவர்.

நித்யாவை காதலித்து மணந்துகொண்டவர். பாலாஜி மூலம் நித்யாவும் விஜய் டிவியின் சில ஷோக்களில் தலைகாட்டினார்.

டி.ஆர் மற்றும் நடிகை சதா இருவரும் நடுவராக இருந்த `ஜோடி’ ஷோ ஷூட்டிங் நடந்தபோதுதான் கணவன் - மனைவியான இருவருக்குமிடையே பிரச்னை என்கிற விடயமே வெளியில் தெரிந்தது.

சில நாள்களில் பாலாஜிமீது பொலிஸில் புகார் அளித்தார் நித்யா. இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

இதேவேளை, மகள் போஷிகாவுடன் தனியாக வாழும் நித்யா, பாலாஜியை நேருக்கு நேர் சந்தித்தே சில வருடங்களாகிவிட்ட நிலையில், தற்போது, இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்கள். இதனால், பார்வையாளர்களுக்கு மத்தியில் சற்று அதிர்ச்சியாக இருப்பதாகவும் கருத்து வெளியாகியுள்ளன.

அது மட்டும் இன்றி, இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருவரும் போட்டியாளராக இருப்பதால் மக்களின் எதிர்ப்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.

33000 total views