மணம்புரிய துடிக்கும் ஆர்மி வெறியன்! அழகாக பதிலளித்த அபர்ணதி!

Report
713Shares

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம், ஓவியாவை போன்ற ஒரு புகழை எட்டியவர் என்றால் அது அபர்ணதி என்றே கூறலாம்.

இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கும் நிலையில் எதையுமே கருத்திலெடுக்காமல் புறக்கணித்து வந்த அபர்ணதி தற்போது பேட்டிகள் நிகழ்ச்சிகள் என்று பிஸியாகியுள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

அந்தளவு தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவர் போட்டியில் இருக்கும் போது தமிழ்நாடு இளைஞர்கள் ஆரம்பித்த அபர்ணதி ஆர்மி தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அந்த ஆமியிலிருந்து சிலரை நேரடியாக சந்தித்து தனது அன்பை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு ரசிகன் ஆர்யா வேறு திருமணம் செய்தால் செய்து கொண்டு போகட்டும். நான் திருமணம் செய்யாமல் உங்களுக்காகவே காத்திருக்கிறேன். என்னை திருமணம் செய்வீர்களா? என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அபர்ணதி நான் உங்கள் மேல் நிறைய மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறேன். அது காதலாகுமா என்றால் இல்லை.

ஆனால், உங்கள் அன்பு, என் மீது வைத்த பாசம் தான் என்னை துன்பத்தில் இருந்து மீட்டு வந்தது. அதற்கு நான் எப்போதுமே உங்களுக்கு கடமைப்பட்டவள் என்றும் உணர்ச்சி பொங்க பதிலளித்திருந்தார்.

31436 total views