புருவ அழகி பிரியா வாரியருக்கு வந்த சோதனை: போலீஸில் புகார் அளித்த நபர் யார்?

Report
397Shares

’ஓவர் நைட்டில் ஒபாமா ஆகனும்’ என்று பலர் கூறி கேட்டிருப்போம். அது தற்போது பிரியா பிரகாஷ் வாரியருக்கு நிகழ்ந்துள்ளது.

ஆம், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அடார் லவ் என்ற படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. அந்த டீசரில், இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி’ பாட்டில் ஒரு ரொமாண்டிக்கான இளம்பெண் தான் பிரியா பிரகாஷ் வாரியர்.

அந்த பாடலில், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான இளவட்ட ரசிகர்களை பிரியா கவர்ந்துள்ளார். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது.

மேலும், இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட இரண்டு நாள்களிலேயே இவருக்கு லட்சக் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளார்கள்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் கடந்த மூன்று தினங்களாக டாப் லிஸ்டில் இடம்பெற்ற பிரியா வாரியருக்கு எதிராக ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடல் இஸ்லாமியர்களின் மனதை புன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என முகமது அப்துல் முக்கித் என்ற நபர், படத் தயாரிப்பாளர் மற்றும் பிரியா பிரகாஷ் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இளம் நடிகை, பிரியா வாரியர் மீது புகார் தொடுக்கப்பட்டுள்ளது, அவர் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14588 total views