வலைதளத்தில் வைரலாகும் விஜய் 62-ன் வைரல் வீடியோ!

Report
162Shares

மெர்சல்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார்.

மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படம்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த சனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விஜய் 62 படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என ஏ.அர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 'விஜய் 62' படத்தின் விஜய்யின் நியூ லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், 'விஜய் 62' படத்தின் படப்பிடிக்கு செல்லும் போது ரசிகர்களை பார்த்து கை அசைத்தார் விஜய். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

7034 total views