நடிகை நதியாவின் மகளா இவர்?... அம்மாவை விட 1000 மடங்கு அழகில் அசத்தும் புகைப்படங்கள்

Report
6792Shares

ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை நதியா. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984ல் கதாநாயகியாகவும், அதன்பின்பு 2004ல் துணைப் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனத்தில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் .

நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பெண்கள் சைக்கிள் என இதுமட்டுமின்றி பெண்கள் தலை வாரிக்கொண்டது கூட நதியா ஜடை என்று தான். அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்த இவர் தற்போதும் கூட மிக இளமையாக தோற்றமளிக்கிறார்.

2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணதிற்கு பின் ஓரிரு படங்களில் நடித்தாலும் அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் தனது குடும்பத்தை கவனிப்பதில் நேரம் செலவிட்டார். தற்போது அச்சு அசலாக நதியாவைப் போன்று தோற்றமளிக்கும் அவரது மகள்களின் புகைப்படம் வைரலாகிவருகிறது.

265499 total views