ரக்சனுக்கு நான் இருக்கேன்... ஜூலிக்கு சரியான பதிலடி கொடுத்த ஜாக்குலின்

Report
2224Shares

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மெரினாவில் அனைவரையும் கவர்ந்த ஜூலி பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வெறுப்பை சம்பாதித்தார்.

ஜூலி தற்போது தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. மேலும் அவருக்கும் ரக்‌சனுக்கும் காதல் இதில் ரக்‌சன் ஜூலிக்கு கொடுத்த மோதிரத்தை திருப்பி கொடுத்ததாக தகவல் வெளிவந்தது.

இதனை தொடர்ந்து இந்த காதல் விவகாரத்தில் ரக்‌ஷனுடன் தொகுப்பாளராக இருக்கும் ஜாக்குலின் ரக்‌ஷனுக்கு நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒரு இணைய தளத்திற்கு பேட்டி அளித்த ஜாக்குலின் கூறும்போது, ரக்சன் தனது சொந்த முயற்சியால் ரிவியில் தொகுப்பாளர் ஆனவர். எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். அவரால் பாதிக்கப்பட்டவர் என யாரும் கிடையாது.

என்னுடைய நல்ல நெருங்கிய நண்பரும் கூட. இன்று அவருக்கு மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் யார் தலைக்கும் மசாஜ் செய்தோ அல்லது காக்கா பிடித்தோ இந்த நிலைக்கு வரவில்லை.

ரக்சனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பெரிய திரையிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் நானும் ரக்சனும் பெரிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறோம் என காரசாரமாக பேசி உள்ளார்.

ஜாக்குலின் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும் அவர் ஜூலியைத்தான் தாக்கி பேசி உள்ளார் என்பது நன்கு தெரிந்துள்ளது.

76321 total views