கறிவேப்பிலைபோல் தூக்கி எறிந்து விட்டார்கள்... கதறும் சீனியர் நடிகை

Report
414Shares

தற்போது சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் பெரும்பாலனோர் பல்வேறு கட்சிகளில் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு தமிழில் கதாநாயகி வேடம் முதல் அம்மா வேடம் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் கவிதா. தற்போது ஆந்திராவில் செட்டிலாகியிருக்கும் இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தன்னை யாரும் மதிப்பதில்லை என்று கதறியதுடன் கண்ணீர் வழிய பேட்டி அளித்துள்ளார். அவர் கூறும்போது,’பெண்களுக்கு இந்த கட்சியில் மரியாதை இல்லை. எதற்காக இக்கட்சியில் நான் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்? எதிர்கட்சியாக இருந்தபோது என்னை அரசியல் மேடைகளில் பேச பயன்படுத்திக் கொண்டனர்.

ஆட்சிக்கு வந்தபின் என்னை ஓரம் கட்டத் தொடங்கினார்கள். 2 ஆண்டுக்கு முன்பும் இதே போன்ற அவமானத்தை சந்தித்தேன். தற்போது நடக்கும் கட்சி மாநாட்டில் என்னை கலந்துகொள்ளச் சொல்லி எம்எல்ஏ ஒருவர் அழைத்தார்.

ஆனால் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் என்னை மேடை அருகே கூட விடமாட்டார்கள். சந்திரபாபுநாயுடு முதல்வர் ஆவதற்காக நான் கடுமையாக உழைத்தேன். இன்று என்னை கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்து விட்டனர். இதுகுறித்து எனது தொண்டர்களிடம் ஆலோசித்து எதிர்கால நடவடிக்கைபற்றி முடிவு எடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

17434 total views