ஈழத்து மருமகளுக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்! பலரை நெகிழ வைத்த பதிவு..? தீயாய் பரவும் புகைப்படம்

Report
4431Shares

நடிகை ரம்பா தனக்கு மூன்றாவதாக பிறந்துள்ள ஆண் குழந்தையுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் புகைப்படம் வைரலாவதற்கு குழந்தை மட்டும் காரணமல்ல. ரம்பா பகிர்ந்துள்ள உருக்கமான தாய்மை ததும்பும் பதிவு காரணம்.

அந்தப் பதிவில் ரம்பா கூறியுள்ளதாவது,

எனது மகன் ஷிவினை நான் கையில் ஏந்தும்போது ஒரு சிறிய சர்க்கரைப் பை போல் இருக்கிறது. போர்வைக்குள் இருந்து அந்த பிஞ்சுவிரல்கள் அழகாக எட்டிப் பார்க்கின்றன.

அவனது சிரம் கருமையான சுருள் முடியால் அழகாக இருக்கிறது. என் கரங்களில் அந்த கூந்தல் வழிந்தோடுகிறது. பிஞ்சுக் குழந்தைகளின் இந்த சிறிய உருவம் என்னை வியக்க வைக்கிறது. எனது ஆவலைத் தூண்டுகிறது.

கோடை கால ஸ்ட்ராபெர்ரி போல் ஷிவின் புன்னகைக்கிறான். என்னுள் சூரிய ஒளியை நிரப்புகிறான். அவன் நிரப்பிய சூரிய வெளிச்சம் இவ்வுலகில் இல்லை.

அவனது கண்கள், நான் நினைத்துப் பார்த்ததைவிட பிரகாசமாக இருக்கின்றன. அவனது உள்ளங்கை அவ்வளவு மென்மையாக இருக்கின்றன. லகுவாக இருக்கிறான். அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறான்.

அவன் மீது வீசும் மணம் தெய்வீகமாக இருக்கிறது. நான் உயிருடன் இருக்கும்வரை நானே அவனுக்கு காவல். எனது குழந்தைகள் மீதான அன்பு தீராது”இவ்வாறு ரம்பா பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

126587 total views