சருமத்தைப் பாதுகாக்கும் இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கோங்க.. இன்னும் அழகில் ஜொலிக்கலாம்

Report
0Shares

குளிர்காலத்தில் சருமம் வறண்டுவிடும். இந்த நாட்களில் நம் சருமத்திற்கு போதுமான நீர் கிடைக்காமல், வறட்சி, சுருக்கங்கள், வீக்கம் மற்றும் விரிசல்களை ஏற்படுத்துகிறது.

இந்த விளைவுகளிலிருந்து பல்வேறு வைட்டமின்கள் நம் சருமத்தைப் பாதுகாக்கின்றன. கீழே, கொடுக்கப்பட்டுள்ள வைட்டமின்களை உணவின் மூலம் எடுத்துக்கொண்டால் உங்கள் சருமம் இந்த குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்.

வைட்டமின் E நிறைந்த உணவுகள்

வைட்டமின் E காற்று மாசுபாடு, சூரிய ஒளி போன்றவற்றால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுத்து ஆரோகியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் நீங்கள் என்றும் இளமையோடும் பொலிவுடனும் இருப்பீர்கள்.

அவோகேடோஸ், கீரை, கடுகு கீரைகள், பாதாம், வேர்க்கடலை, பெர்ரி, கிவி மற்றும் முழு தானியங்கள் வைட்டமின் E நிறைந்துள்ளன. இதை சாப்பிட்டால் வறண்ட சருமம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை பயக்கும்.

வைட்டமின் D நிறைந்த உணவுகள்

குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படும். வைட்டமின் D குறைபாட்டால் தோல் வறண்டு போகிறது. வைட்டமின் D நிறைந்த உணவுகளாக காளான்கள், ஹெர்ரிங், மத்தி, சால்மன், முட்டையின் மஞ்சள் கரு, சீஸ், தானியங்கள், சோயா பால் மற்றும் ஆரஞ்சு சாறு போன்றவை உள்ளன.

வைட்டமின் C நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி சருமத்திற்கு ஆண்டி ஆக்ஸிடண்ட் போன்றது. சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் கொலாஜின்களை உற்பத்தி செய்யக் கூடியது. வைட்டமின் C சத்துக் குறைந்தால் சருமச் சிதைவு, வறண்ட சருமம், மென்மைத் தன்மை இல்லா சருமம், தோல் சுருக்கம் போன்றவை ஏற்படும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்ற காய்கறிகளில் வைட்டமின் C எக்கச்சக்கமாக உள்ளது.

வைட்டமின் K நிறைந்த உணவுகள்

வைட்டமின் K சருமத்தில் உள்ள காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது, இதனால் குளிர்காலத்தில் தோல் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க இது அவசியம். பச்சை இலை காய்கறிகளில், முக்கியமாக கீரை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலே ஆகியவை இந்த வைட்டமினை கொண்டுள்ளது.

வைட்டமின் A நிறைந்த உணவுகள்

சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதும் அதேசமயம் பற்களின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் A மிக முக்கியம்.

வைட்டமின் A ஆனது கல்லீரல், முட்டையின் மஞ்சள் கரு, மீன் போன்றவற்றில் காணப்படுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஸ்குவாஷ், கீரை போன்ற காய்கறிகளில் மா, திராட்சைப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற பழங்கள் கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளன, அவை செரிமானத்தின் போது வைட்டமின் A ஆக மாற்றப்படுகின்றன.

திடீரென சருமத்தில் அரிப்பு, சரும வறட்சி, சுருக்கம் போன்றவை ஏற்படுவதைக் கண்டு பயந்து மருத்துவரை அணுகுவார்கள். அதற்கு சில வைட்டமின்கள் குறைபாடே காரணம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இதனால், பதட்டமடைந்து மருத்துவரை அணுகி செலவு செய்வதைக் காட்டிலும் சில வைட்டமின்க நிறைந்த உணவுகளை தவறாது உணவுகளில் சேர்த்துக் கொண்டாலே போதும். அதுவும் இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற மேற்சொன்ன உணவுகள் மிகவும் முக்கியமானவை.

loading...