கொத்து கொத்தா முடி கொட்டுதா? குப்பைமேனி போதும் முடி நீளமா வளர்ந்து சும்மா பளபளன்னு அலைபாயும்

Report
880Shares

உங்கள் கூந்தலுக்கு நன்மை பயக்கும் செடிகளில் குப்பைமேனியும் ஒன்று.

கூந்தலுக்கு அவை ஏற்படுத்தும் நன்மைகளைப் பற்றி இன்று அறிந்து கொள்வோம்.

குப்பைமேனி இலைகள், பொடுகை எதிர்த்துப் போராடி, கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது.

மருத்துவ நன்மைகள்

குப்பைமேனி பல்வேறு நன்மைகள் கொண்ட ஒரு செடி.

கிருமி எதிர்ப்பு, ஒவ்வாமை பாதிப்பை நீக்கும் தன்மை, சுத்தீகரிக்கும் தன்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகளை ஒருங்கே கொண்டது இந்த குப்பைமேனி.

இப்படி பல நன்மைகள் கொண்ட இந்த இலையை, பொதுவாக டீ மற்றும் டானிக்கில் உபயோகப்படுத்துகின்றனர். நாட்டு மருந்து அல்லது மூலிகை கடைகளில் இதனை மாத்திரையாக காண முடியும்.

ஆனால் இது ஒரு பயனுள்ள வழி அல்ல. இதனை நேரடியாக உண்ணலாம். சாலட் போன்றவற்றில் சேர்த்தும் இதனை சாப்பிடமுடியும்.

கூந்தலுக்கு நன்மைகள்

  • குப்பைமேனி, கூந்தல் பாதுகாப்பில் பயன்படக் காரணம், இது கூந்தலின் எண்ணெய்ப் பதத்தை அதிகரித்து தருகிறது. மேலும்,தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியேற்றுகிறது.
  • இதனால் உங்கள் கூந்தலின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாகின்றன.
  • இந்த செடியின் நன்மைகளைப் பற்றி அறிந்தவர்கள், தாங்கள்பயன்படுத்தும் ஷாம்பூவில் சில இலைகளை சேர்த்து பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெறுவார்கள்.
  • மேலும் அவர்கள் தயாரிக்கும் பேஸ் மாஸ்க், டானிக் இன்னும் பலவற்றில் இதனை சேர்த்து தயாரித்து பயன்படுத்துவார்கள்.
  • குப்பைமேனியை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.
  • இதனால் கூந்தலின் வேர்க்கால்கள் வலிமை அடைகிறது. இதனால் முடி உதிர்வது அல்லது உடைவது தடுக்கப்படுகிறது.
  • தலை முடியில் எண்ணெய்பதத்தை நிர்வகிப்பது என்பது மிகவும் கடினமான செயல்.
  • இது ஒரு மிகப் பெரிய பிரச்சனையும் கூட, ஆனால் இதற்கு ஒரு தீர்வு உள்ளது. அதிகரித்த எண்ணெயப்பதத்தின் காரணத்தால்
  • வெளியில் இருந்து தூசு மற்றும் இதர நச்சுகள் தலையில் குடியேறி விடுகின்றன.
  • இதனால் கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, தலை முடியும் பிசுபிசுப்பாக மாறுகிறது. அதிர்ஷ்டவசமாக, குப்பைமேனி இலை, அதிகரித்த எண்ணெய்பதத்தை கட்டுப்படுத்துகிறது.

இது எப்படி சாத்தியப்படுகிறது?

உங்கள் கூந்தலில் உள்ள நச்சுகளை சுத்தம் செய்வதால் மற்றும் உச்சந்தலையில் எண்ணெய் பிசுபிசுப்பை அதிகரிக்கும்

கிருமிகளுடன் எதிர்த்து போராடுவதால் இது சாத்தியப்படுகிறது.

குப்பைமேனி டீ

கூந்தல் பாதுகாப்பில் இந்த செடியின் முழு நன்மைகளையும் பெற, குப்பைமேனி இலைகளைக் கொண்டு ஒரு தேநீர் தயாரிக்கலாம்.

200மிலி தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன், அதில் சில குப்பைமேனி இலைகளைப் போடவும். பின்பு அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.

5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். இந்த நீரை ஆறியவுடன் அப்படியே பருகலாம் அல்லது வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசியவுடன் இந்த நீரால் ஒரு முறை தலையை அலசலாம்.

இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்துவதால் அடுத்த சில நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் இந்த இலைகளை ஸ்மூதி, ஸ்டூ, சாலட் போன்றவற்றிலும் சேர்த்து சுவைக்கலாம்.

You May Like This Video

loading...