அதிக அழுக்கால் விழும் வழுக்கையை போக்க இந்த ஒரு இயற்கை பொருள் போதும்! முடி அடர்த்தியா வளரும்

Report
900Shares

முடி உதிர்வு, வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி, அதிக அழுக்கு சேர்த்தல் இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் சுற்றுசூழலில் உள்ள மாசுபாடுகளால் உருவாகிறது.

நாளுக்கு நாள் இந்த பாதிப்புகள் அதிகமாகிறதே தவிர, குறைந்த பாடில்லை.

இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க வெங்காயம் ஒன்றே போதும். வழுக்கை முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை எளிதில் தீர்வு கொண்டு வர முடியும்.

இனி இதை தயாரித்து, பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

இந்த வெங்காய எண்ணெய்யை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தயார் செய்யலாம்.

  • தேங்காய் எண்ணெய் 250 மி.லி.
  • வெங்காயம் 3
  • கருவேப்பில்லை 1 கப்
  • ஆமணக்கு எண்ணெய்
  • ஆலிவ் எண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

எண்ணெய் காய்ந்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொண்டு வதக்கவும்.

பின் இவற்றுடன் கருவேப்பில்லை இலைகளையும் சேர்த்து வதக்கவும்.

10 நிமிடம் கழித்து இவற்றுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

பிறகு இதனை ஆறவிட்டு வடிக்கட்டி கொண்டு தலைக்கு பயன்படுத்தலாம்.

வாரத்திற்கு 2-3 முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் நல்ல பலனை அடையாளம்.

loading...