வாய்ப்பகுதியை சுற்றி அசிங்கமாக உள்ள கருமையை போக்க இந்த பேஸ்ட்டை பயன்படுத்துங்க..!

Report
298Shares

சருமம் நிறமாக இருந்தாலும் வாயை சுற்றிலும் சிலருக்கு கருமையாக இருக்கும். நீங்கள் மேக்கப் போட்டு மறைத்தாலும் அந்த இடம் மட்டும் அடர்ந்த நிறத்தில் தெரியும்.

அவ்வப்போது அந்த கருமையை நீக்க முயற்சி செய்யுங்கள். இல்லை அது முக அழகை குறைத்து விடும்.

இந்த குறிப்பை உபயோகப்படுத்துங்க. நிச்சயம் பலனளிக்கும்.

ஓட்ஸ் மாஸ்க் தேவையானவை

  • ஓட்ஸ் – 1 டீ ஸ்பூன்
  • தக்காளி சாறு – 1 டீ ஸ்பூன்
  • தயிர் – அரை டீ ஸ்பூன்

தக்காளி பெரிய துவாரங்களை சுருக்க செய்யும். அழுக்குகள் செல்கள் தங்காது.

அதோடு நிறத்தையும் வெளுக்கச் செய்யும் குணமுண்டு. தயிர் ஈரப்பதத்தை அளிக்கும், கருமையையும் நீக்கும்.

ஓட்ஸ் இறந்த செல்களை நீக்கும் இயற்கையான ஸ்க்ரப். சுருக்களை நீக்கி முகத்தை பொலிவுறச் செய்யும்.

ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.

11622 total views
loading...