தலையில் தாங்க முடியாத அரிப்பு ஏற்படுகிறதா? தினமும் இப்படி செய்யுங்க!

Report
49Shares

தலை அரிப்புக்கு நம் வீட்டில் இருந்தே தீர்வு காண முடியும். தலையில் ஏற்படும் அரிப்புக்கு பல காரணங்கள் உள்ளன.

அவற்றில் எது உங்கள் தலை அரிப்புக்குக் காரணம் என்பதை முதலில் கண்டறிந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதற்கான வீட்டு வைத்தியம் மூலம் இலகுவாக அகற்றி விடலாம்.

இதில் உங்கள் முடிக்கு எது சிறந்ததோ அதை தேர்வு செய்து நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

1. தேங்காய் எண்ணெய்

நம்மில் பல பேர் இப்போது தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதே இல்லை. ஆனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தேங்காய் எண்ணெய் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து அலசிவிடுங்கள்.

2. தேன் மாஸ்க்

சிறிது தேன் எடுத்து மாஸ்க் போல உங்கள் தலையில் போட்டுக் கொள்ளுங்கள். இது இயற்கையான மாய்ஸ்சரைசர் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

3. கற்றாழை

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று கற்றாழை. இதில் உள்ள சதைப்பகுதியை எடுத்து உங்கள் முடிகளின் வேர்பகுதிகளில் தடவுங்கள். இது உங்களுக்கு அரிப்புகளில் இருந்து விடுதலைத் தரும்.

4. உணவுமுறை

உங்கள் உணவில் கண்டிப்பான முறையில் பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகள் போதுமான அளவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மேலும் மழைக்காலத்திலும் தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.

loading...