தமிழர்களின் முக்கிய உணவு பொருளான இதில் தான் முடியை கிடு கிடுனு வளர வைக்கும் சக்தி இருக்கிறதாம்!

Report
297Shares

வெங்காயம் தமிழர்களின் உணவுகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்க கூடிய ஒரு பொருள்.

வெங்காயத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின்-சி, ஃபிளவனாய்டுகள்

மற்றும் பைட்டோனுயூட்ரின்கள் இருப்பதால் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாகிறது.

இதை தவிர வெங்காயத்தில் நார்சத்து, ஃபோலிக் அமிலம், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன.மற்ற அல்லியம்

வகையை சார்ந்த காய்கறிகளை விட வெங்காயம் ஆரோக்கியமான ஒன்று. வெள்ளை வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதை தவிர கூந்தல் வளர்ச்சிக்கு உதவி புரிகின்றது. வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது.

வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடிக்கு பளபளப்பு அதிகமாகிறது.

தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.பேன் தொல்லை குறைகிறது.

வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியில் அடர்த்தி அதிகரிக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், முடி வளர்ச்சிக்கு ஏதுவாகிறது. பொடுகு தொல்லைக்கு சிறந்த ஒரு தீர்வு.

வெங்காய சாறை தயாரிப்பது எப்படி?

  • வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி மிக்ஸி யில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  • வெங்காய திப்பிகள் முடிகளில் சேராதவாறு வெறும் சாறை மட்டும் பயன்படுத்தவும்.

பயன் படுத்தும் முறை

  • வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும்.
  • விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும்.ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.
  • வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும். வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.
you may like this video

loading...