உலகில் மில்லியன் கணக்கானோர் இந்த ஒரு பிரச்சினையால் அவமான படுகிறார்கள்! தமிழர்களே தப்பிக்க இதை செய்யுங்கள்

Report
282Shares

உலகில் மில்லியன் கணக்கில் மக்கள் தலைமுடி உதிர்வு பிரச்சினையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

ஒருவருக்கு ஒரு நாளைக்கு சில முடிகள் உதிர்வது சாதாரணம். ஆனால் அப்படி உதிரும் முடியின் அளவு அதிகமாகும் போது தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க அழகு நிலையங்கள் அல்லது தலைமுடி பராமரிப்பு நிலையங்களில் ஏராளமான வெளிநாட்டு சிகிச்சைகள் உள்ளன.

ஆனால் அந்த சிகிச்சைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கும். அதோடு இந்த சிகிச்சைகள் விலை அதிகமானதாகவும் இருக்கும்.

இந்நிலையில் தலைமுடி உதிர்வதை தடுக்கும் இந்த இயற்கை வழியை பின்பற்றுங்கள்..

நெல்லிக்காய் பவுடர்

நெல்லிக்காய் பாரம்பரியமாக தலைமுடியைப் பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், சேதமடைந்த மயிர்கால்களை சரிசெய்யவும், வலிமைப்படுத்தவும் செய்யும்.

பூந்திக்கொட்டை பவுடர்

பூந்திக்கொட்டையில் உள்ள நொதிப் பொருள், மாசுக்களில் இருந்து மயிர்கால்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். அதோடு டாக்ஸின்களால் மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு உடைவதையும் தடுக்கும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் மயிர்கால்களை புத்துணர்ச்சி அடையச் செய்வதோடு, ஸ்கால்ப்பின் pH அளவையும் நிலைப்படுத்தும். மேலும் இது எளிதில் ஸ்கால்ப்பால் உறிஞ்சப்பட்டு, ஒட்டுமொத்த தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

தேவையான பொருட்கள்

  • நெல்லி பவுடர் - 1 டீஸ்பூன்
  • பூந்திக்கொட்டை பவுடர் - 1 டீஸ்பூன்
  • கற்பூர பொடி - 1/4 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை

  1. ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் ஒரு ஸ்பூன் கொண்டு பேஸ்ட் பதத்தில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

  • தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
  • 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலையை அலச வேண்டும்.
  • இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால் நல்ல தீர்வை விரைவில் காணலாம்.

இந்த மாஸ்க்கின் நன்மைகள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தினால், தலைமுடியில் அற்புதங்கள் நிகழும்.

முக்கியமாக இந்த மாஸ்க் தலைமுடி உதிர்வதை விரைவில் தடுத்து நிறுத்தும். அதோடு தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகரிக்கவும் செய்யும்.

9867 total views