தயிரை இப்படி தேய்த்தால் முடி கொட்றது நிக்கும்? தடையின்றி நீளமா வளரும்!

Report
159Shares

கூந்தர் வளர்ச்சி என்பது எளிமையான காரியம் கிடையாது. இதற்கு அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் கூந்தல் வளர்ச்சிக்கு யோகர்ட் பயன்படுத்துவது சிறந்த உதவியளிக்கும்.

ஆரோக்கியமான தலைமுடி வளர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிக கவனம், சக்தி, முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தலைமுடிக்கு வேகமாக ஆரோக்கியம் ஊட்ட உதவும் வகையிலான சில பொருட்கள் உள்ளன.

இதில் யோகர்ட் என்று அழைக்கப்படும் சுவையூட்டப்பட்ட தயிர் பொதுவான தலைமுடி நலன் சார்ந்த பொருளாகும்.

இதில் வைட்டமின், கொழுப்பு ஆசிட் அதிகம் இருக்கும். இது தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானதாகும்.

யோகார்ட் நல்லதா?

இந்த பொருள் செம்மையான கூந்தல் வளர்ச்சிக்கு உதவி செய்யக் கூடியதாகும். பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந் தலையில் நல்ல முறையில் செயலாற்றும்.

நீண்ட நேர ஈரப்பதத்துடன் கூடிய அமைதியான சுருண்ட கூந்தலை பெற உதவும். முடி உதிர்வதை தடுத்து உச்சந் தலைக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அதோடு நுண் குமிழிகள் அடைபடுவதை குறைக்கும். உச்சந் தலையின் உள்ளூர செயல்பாட்டை நிலைநிறுத்தி, சரும உற்பத்தியை ஒழுங்குபடுத்தும். யோகர்ட் அதன் குளிர் தன்மை மோசமான உச்சந்தலையிலும் செயலாற்றும்.

பயன்படுத்தும் முறை

  • முட்டை மற்றும் யோகர்ட்

தேவையான பொருட்கள்

  1. ஒரு முட்டை
  2. 2 டீ ஸ்பூன் யோகர்ட்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
  • மஞ்சள் மற்றும் வெள்ளை கரு நன்றாக கலந்தவுடன் 2 ஸ்பூன் யோகர்ட் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்குங்கள்.
  • உங்கள் கூந்தல் முழவதும் இதை வேர் முதல் நுணி வரை தடவவும். முடி காய்ந்த அல்லது ஈரப்பதத்தில் இருக்கலாம்.
  • தலை முடியின் அனைத்து பகுதிகளிலும் இதை தடவியவுடன் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
  • பின்னர் இதை ஷாம்பு மற்றும் குளிர்ந்த நீரில் கழுவவும். நீங்கள் இந்த கலவயை வாரத்தில் 2 முறை செய்யலாம். முட்டையில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இது உங்களது உச்சந் தலை மற்றும் தலைமுடிக்கு ஊட்டம் அளிக்கும்.

5240 total views