வறட்சியால் கைகளில் அடிக்கடி தோல் உரிகிறதா? அதிசயம் நடக்கும் இப்படி பண்ணுங்க..!!

Report
88Shares

பெரும்பாலும் சருமத் தோல் கோடை மற்றும் குளிர் காலங்களில் தான் அதிகம் இப்பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

அதிலும் கைகளில் தான் அதிகமாக தோல் உரியும். சிலருக்கு கன்னங்களில் உரியும். இந்த பிரச்சினைக்கு இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ஸ்கரப்களைக் கொண்டு தீர்வு காணலாம்.

அதிலும் நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கைகளுக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், தோல் உரித்து முதுமைத் தோற்றத்தைத் தரும் கைகளை அழகாகவும், பட்டுப் போன்றும் மாற்றலாம்.

சரி, இப்போது கைகளில் தோல் உரியும் பிரச்சினையை சரிசெய்ய உதவும் சில நேச்சுரல் ஸ்கரப்களை எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என்று காண்போம்.

தேவையான பொருள்...

கடலை மாவு , பாதாம் எண்ணெய் , ரோஸ்மேரி ஆயில்

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 4- துளிகள் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின் தோல் உரிந்து அசிங்கமாக காணப்படும் கைகளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் நீரில் கழுவுங்கள்.

இச்செயலால் கைகளில் உள்ள வறட்சி நீங்கி, கைகள் பட்டுப் போன்று இருக்கும்.

தேவையான பொருள்...

காபி தூள் , தேன்

ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி தூள் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை கைகளில் தடவி, 5-10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி, கைகளை லேசாக மசாஜ் செய்யுங்கள். இதனால் கைகள் மென்மையாக இருக்கும்.

3796 total views