நான் சாகப் போகிறேன் என்று கதறிய சிறுவனின் இன்றைய நிலை... நேற்று நடந்தது எல்லாம் நடிப்பா? உண்மை பின்னணி இதுதான்

Report
834Shares

நேற்றைய தினத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்டேன் பகுதியில் எழும்பு நோயினால் பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறுவன் ஒருவன் தன் தாயிடம் வந்து "நான் குள்ளமாக இருப்பதால் தன்னை சக மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள். எனக்கு இந்த உலகத்தில் வாழவே படிக்கவில்லை. எனக்கு ஒரு கயிறு கொடுங்கள். அல்லது என்னைக் கொல்ல வேண்டும் என யாராவது நினைத்தாலும் எனக்குச் சந்தோஷம் தான்" எனக் கதறிய அனைவரையும் கண்கலங்க வைத்தது.

குறித்த காட்சி வைரலாக பரவியதையடுத்து பலரும் இந்த சிறுவனுக்கு ஆறுதல் கூறியும், ராகிங் செய்தவர்களுக்கு எதிர்ப்பு தெரவித்தும் வந்தனர். இந்நிலையில் குறித்த சிறுவனுக்காக ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ் கிரௌட் பண்டிங் மூலம் நிதி திரட்டியதில், ரூ.1.30கோடி நிதி வசூலாகியுள்ளதாகவும், குறித்த சிறுவனிடம் விரைவில் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் குறித்த சிறுவன் அழுதது எல்லாமே நடிப்பு என்றும் பணத்திற்காக இவ்வாறு செய்துள்ளதாகவும், இவருக்கு வயது 9 இல்லை 18 என்றும் பெரும் பணக்காரராக இருக்கும் இவர் தற்போது மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. ஆனால் சிறுவன் ஏமாற்றுவதற்கு எந்தவொரு நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

ஆனால் அவுஸ்திரேலிய நெட்வொர்க் டெனின் உள்ள ஸ்டுடியோவில் கடந்த 2015ம் ஆண்டு அளித்த பேட்டியில், குவேடனுக்கு 2015ம் ஆண்டில் நான்கு வயது என்பது உறுதியாகியுள்ளதையடுத்து, ஏமாற்றுகிறார் என்று குற்றம்சாட்டிய அனைவருக்கும் இக்காட்சி தக்க பாடத்தினையும் அளித்துள்ளது.

27378 total views
loading...