பெண்ணின் படுக்கை அறையில் விழுந்த மலைபாம்புகள் ! அலறி துடித்த பெண்

Report
182Shares

ஆஸ்திரேலியாவில் இணை சேர்ந்த மலைப்பாம்புகள் பெண்ணின் படுக்கை அறைக்குள் விழுந்த சம்பவத்தில் பெண் பதறிபோயியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் புறநகரில் வனப்பகுதிக்கு அருகில் பெண் ஒருவர் வீடு கட்டி வசித்து வருகிறார்.

இந்நிலையில், காட்டில் இருந்து வந்த இரு மலைப்பாம்புகள் பெண்ணின் வீட்டின் மேலே இணைசேர்ந்து ஆடிக் கொண்டிருந்தன.

மரத்தினால் செய்யப்பட்ட வீடு என்பதால் பாம்புகளின் எடையைத் தாங்க முடியாமல் மரச்சட்டம் முறிந்ததில் இரு பாம்புகளும் அந்தப் பெண்ணின் படுக்கை அறைக்குள் விழுந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் பாம்புகளைப் பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவித்தனர்.

7558 total views